உஷார்...செல்பி எடுத்தால் பேன் பரவும் அபாயம்: மருத்துவர்கள் எச்சரிக்கை

Webdunia
சனி, 29 ஆகஸ்ட் 2015 (12:00 IST)
தற்போது செல்பி மோகம் உலகம்  முழுவதும் மிகவும் பிரபலாமாக உள்ளது,  நமது பிரதமர் முதல் நமது நண்பர்கள் வரை  யாரும் இதற்கு விதிவிலக்கல்ல. திருவிழாக்கள், வீட்டு நிகழ்ச்சிகள், இறந்த வீடு, திருமண வீடு என எல்லா நிகழ்ச்சிகளையும் செல்பி எடுத்து போடும் செல்பி பிரியர்களுக்கு தற்போது இது ஒரு முகம் சுழிக்கும் செய்திதான்.

செல்பி எடுக்கும் போது பலர் தங்கள் தலைகளை ஒருவருடன் ஒருவர் சாய்த்து போஸ் கொடுக்கின்றனர். இதனால் அவர்களுக்கு ஒருவர் தலையில் இருந்து மற்றொருவர் தலைக்கு 'பேன்'கள் பரவுகின்றன என குழந்தைகள் நல  மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் செல்பி எடுப்பவர்கள் தலைகளை சாய்த்து வைத்து செல்பி எடுக்க வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆண்களை விட பெண்களே அதிகமாக இது போன்ற பிரச்சனைகளால் தங்களிடம் வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.