கடந்த 20 ஆண்டுகளாக ரஷ்யாவின் தனது ஆட்சியதிகாரத்தை தக்க வைத்துள்ள விளாடிமிர் புதின் 2036 வரை அதிபராக இருக்க எடுத்துள்ள முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய அதிபருக்கான பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். மேலும் ஒருவர் தொடர்ந்து இருமுறை அதிபர் பதவி வகிக்க ரஷ்ய சட்டத்தில் இடமில்லை. கடந்த 2000ம் ஆண்டு முதல் அதிபராக இருந்து வந்த விளாடிமிர் புதின், 2006க்கு பிறகு பிரதமராக பதவியேற்று கொண்டார். பிறகு 2012ம் ஆண்டில் மீண்டும் அதிபராக பதவியேற்றார். இப்படியாக தொடர்ந்து ரஷ்யாவின் ஆட்சியை 20 வருடமாக தனது கட்டுப்பாட்டில் வைத்து வருகிறார் விளாடிமிர் புதின்.
இந்நிலையில் தற்போதைய அவரது பதவிக்காலம் 2024 வரை உள்ளது. இதற்கு பிறகு மேலும் 12 ஆண்டுகள் தனது பதவிக்காலத்தை நீட்டிக்க அரசியலமைப்பு திருத்த சட்டத்தை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதில் மக்களின் கருத்துகளை கேட்க பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இதில் புதினுக்கு ஆதரவாக வாக்குகள் அதிகம் வந்துள்ளதால் பதவிக்காலம் நீட்டிப்புக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தொடர்ந்து 36 ஆண்டுகளுக்கும் ஒருவரே ரஷ்ய அதிகாரத்தை கையில் வைத்திருப்பது சர்வதிகாரத்திற்கு வழிவகுக்கும் என எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.