முடிவுக்கு வந்த சிரியா போர்: ரஷ்யா தகவல்...

Webdunia
புதன், 4 ஏப்ரல் 2018 (19:28 IST)
சிரியாவில் கடந்த இரண்டு மாதங்களாக சிரியாவில் உள்நாட்டு போர் நடைபெற்று வந்தது. இந்த போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது என ரஷ்யா தகவல் வெளியிட்டுள்ளது. 
 
சிரியாவில் கடந்த இரண்டு மாதங்களாக சிரிய அரசிற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் போர் நடைபெற்று வந்தது. இவர்களுக்கு இடையே நடைபெற்ற சண்டையில் ஏராளமான அப்பாவி மக்கள், குழந்தைகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 
 
இந்த தாக்குதலின் போது கிழக்கு கவுட்டா பகுதி முழுவதும் கிளர்ச்சியாளர்களின் பிடியில் சிக்கியது. இதனால் அந்த பகுதியில் வாழ்ந்து வந்த பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர். 
 
தற்போது கிளர்ச்சியாளர்களிடம் இருந்து 95 சதவீத இடங்களை அதிபர் படைகள் மீட்டு விட்டன. அந்தப் பகுதியின் கடைசி இடமான டூமாவில் இருந்து கிளர்ச்சியாளர்களை பின்வாங்க செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டது. 
 
இந்நிலையில், கிளர்ச்சியாளர்கள் அந்த பகுதியில் இருந்து வெளியேரி வருகின்ரனர் எனவும், பொதுமக்கள் மீண்டும் கவுட்டா பகுதிக்கு திரும்பி வருவதாகவும் ரஷிய ராணுவ அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்