இதனால் மனமுடைந்த அந்த சிறுவன் தன்னுடைய தாயிடம் ‘ஒரு கயிறு கொடுங்கள் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். இல்லையென்றால் என்னை நீங்களே கொலை செய்துவிடுங்கள். என்னுடைய இதயத்தில் கத்தியால் குத்திக் கொள்ள வேண்டும் போல இருக்கிறது’ எனக் கூறி கட்டுப்படுத்த முடியாமல் அழுகிறான். இதனை வீடியோவாக எடுத்த அவனுடைய தாய் அதை சமூக வலைதளத்தில் பகிர்ந்தார்.
இதையடுத்து, குவாடனுக்கு ஆதரவாக பலரும்,சிறுவன் குவாடனுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக குவாடனுடன் நாங்கள் இருக்கிறோம் என பல பிரபலங்கள் வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர். வுல்வரின் பட புகழ் ஹூஜ் ஜாக்மேன், கூடைப்பந்து வீரர் எனெஸ் காட்னர் உள்ளிட்ட பலர் குவாடனுக்கு ஆதரவாக வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். ஹூஜ் ஜாக்மேன் ‘இனி நானும் உனது நண்பன்’ என கூறி வீடியோ வெளியிட்டார்.
இதையடுத்து, ரஹ்பி போட்டியில் சிறப்பு விருந்தினராக குவாடன் கலந்து கொண்டார். இந்நிலையில், டிஸ்னிலேண்ட் செல்வதற்காக தனக்கு திரட்டி கொடுக்கப்பட்ட 3.40 கோடி ரூபாய் அன்பளிப்பை ஒரு அறக்கட்டளைக்கு கொடுத்து தன் தன்பிக்கை உலகுக்கு காட்டியுள்ளார் குவாடன்.