ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல பாப் பாடகி வீட்டில் 3 லட்சத்து 50 ஆயிரம் டாலர் மதிப்புள்ள நகைகள் கொள்ளை போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல பாப் பாடகியான இக்கி அஸலியா, தனது காதலரும் பிரபல ராப் பாடகருமான பிளேபாய் கார்ட்டியுடன் அமெரிக்காவின் அட்லாண்டாவில் சொந்தமாக ஒரு வீடு எடுத்து தங்கியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி தனது வீட்டில் அவர் தனியாக இருந்தபோது பின் வாசல் வழியாக முகமுடி அணிந்து ஒரு திருடன் வீட்டின் பின்புறம் வழியாக வந்து, அவரது டைனிங் அறையில் வைக்கப்படிருந்த பையில் இருந்த 3 லட்சத்து 66 ஆயிரம் டாலர் (அதாவது இந்திய மதிப்புப்படி ரூ.2 கோடியே 62 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய்) மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளான். இது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
அந்த பை இக்கியின் காதலரான கார்ட்டியின் பை என தெரியவந்துள்ளது. மேலும் அந்த பையில் சில டாலர் நோட்டுகளும் கொள்ளைப்போயுள்ளன. இது குறித்து இக்கி போலீஸாரில் புகார் அளித்த நிலையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.