சிறைவாசிகளுக்கு கொரோனா: எத்தனை பேருக்கு பாதிப்பு?

Webdunia
வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (16:13 IST)
சீனாவில் சிறைச்சாலைகள் வரை கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தல்களை கொடுத்து வருகிறது. சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுகானில் கடந்தாண்டு டிசம்பரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், அந்நாட்டை ஆட்டி படைத்து வருகிறது.  
 
சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,236 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 74,576லிருந்து 75,465 ஆக அதிகரித்துள்ளது.
 
சீனாவில் 450-க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் மற்றும் போலீசாருக்கு கொரானா தொற்று இருப்பதாக சீன அரசு தெரிவித்துள்ளது. சிறைகளை பொறுத்தவரையில், முதன் முதலில் சிறைத்துறை அதிகாரி ஒருவருக்கு கொரானா பாதித்திருப்பது கடந்த 13 ஆம் தேதி கண்டறியப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்