ஈராக் விமான நிலையம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவின் பேரில் தாக்கப்பட்டதும், அதில் ஈரான் ராணுவ தளபதி சுலேமானி கொல்லப்பட்டதும் உலக நாடுகள் இடையே பீதியை ஏற்படுத்தியுள்ளன. ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தை கிளர்ச்சியாளர்கள் தாக்கியதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் முடிவடைந்த அடுத்த நாளான இன்று மீண்டும் ஈராக்கில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க அதிபரின் இந்த பேச்சும், ஈராக்கின் மீதான தாக்குதலும் அமெரிக்காவை எதிர்க்கும் நாடுகளுக்கு அவர் விடுக்கும் மறைமுக எச்சரிக்கை போல உள்ளதாக உலக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் இந்த செய்கை மூன்றாம் உலக யுத்தத்திற்கு காரணமாகி விடுமோ என பல நாடுகள் அச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.