2015ஆம் ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த தாமஸ் லிண்டால், அமெரிக்காவின் பால் மோட்ரிக், அஜிஸ் சான்காருக்கு இந்த விருது பகிர்ந்தளிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் சிறந்த அறிவியல் ஆராய்ச்சியாளருக்க, மிக உயர்ந்த விருதான நோபல் பரிசு நோபல் குழுவால் வழங்கப்பட்டு வருகிறது.
மரபணு பற்றிய ஆராய்ச்சிக்காக அமெரிக்கா மற்றும் பிரிட்டனை சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு இந்த பரிசு வழங்கப்படுகிறது. பிரிட்டனைச் சேர்ந்த தாமஸ் லிண்டால், அமெரிக்காவின் பால் மோட்ரிக், அஜிஸ் சான்காருக்க இந்தாண்டின் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
இந்த 3 பேரும் சேதமடையும் மரபணுக்கள் எப்படி சரிசெய்யப்படுகின்றன என்பதை கண்டுபிடித்துள்ளனர். இவர்களின் இந்த கண்டுபிடிப்பு புற்றுநோய் சிகிக்சைக்கு உறுதுணையாக இருக்கும் என்று நோபல் குழு தெரிவித்துள்ளது.