இந்தியா மீது தாக்குதல் நடத்துவோம் : பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரிப் எச்சரிக்கை

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2016 (14:29 IST)
காஷ்மீர் மாநிலம், உரியில் ராணுவ முகாமில் கடந்த 18-ஆம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். அப்போது நடைப்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 17 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.


 

 
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதல் காரணமாக பாகிஸ்தானில் நடைபெற இருந்த சார்க் நாடுகள் மாநாட்டையும் இந்தியா புறக்கணித்தது. இந்தியாவுக்கு ஆதரவாக பூட்டான், வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளும் இந்த மாநாட்டை புறக்கணித்தது. 
 
இந்நிலையில் உரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய எல்லையில் உள்ள பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது நேற்று இரவு இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஐந்து பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 9 ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது
 
இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரிப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் மக்களை காப்பாற்ற இந்தியா மீது பதில் தாக்குதல் நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.
 
எனவே போர் மோகம் சூழ்ந்துள்ள எல்லைப் பகுதி பதட்டத்துடன் காணப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்