கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 32 லட்சம்: 3ல் ஒரு பங்கு அமெரிக்காவில்?

வியாழன், 30 ஏப்ரல் 2020 (06:59 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தினமும் ஒரு லட்சத்திற்கு மேல் அதிகரித்து வரும் நிலையில் தற்போதைய தகவலின்படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 32 லட்சத்தை தாண்டி உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வந்துள்ளது 
 
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் 3,219,242 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலகம் முழுவதும் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 228,194 ஆக இருப்பதாகவும் சற்று முன்னர் உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது 
 
அதேபோல் அமெரிக்காவில் 1,064,194 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டில் 61,656 பேர்கள் கொரோனாவால் பலியாகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு அமெரிக்காவில் உள்ளது என்பது அதிர்ச்சியான தகவல் ஆகும்.
 
அமெரிக்காவை அடுத்து ஸ்பெயினில் 236,899  பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இத்தாலியில் 203,591 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பிரான்சில் 166,420 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இங்கிலாந்தில் 165,221 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஜெர்மனியில் 161,539 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
 
இந்தியாவில் 33,062 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 1,079 பேர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கல் வெளிவந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்