O வைரஸை ஓவர் டேக் செய்த A2a வைரஸ்: எல்லாம் கொரோனா ஃபேமிலி தான்...!!

புதன், 29 ஏப்ரல் 2020 (17:32 IST)
உலகையே அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா வைரஸில் 10 வகை இருக்கிறதாம். 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
 
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 29,974 லிருந்து 31,332 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 987 லிருந்து 1,007 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 7027 லிருந்து 7,696 ஆக உயர்ந்துள்ளது.
 
உலகையே அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா வைரஸில் 10 வகை இருக்கிறதாம் அதில், குறிப்பிட்ட ஒரு வகை தான் தற்போது மனித உயிர்களை பலி வாங்கி வருகிறது. மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள தேசிய உயிர் மரபியல் ஆராய்ச்சிக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இது குறித்து தெரிவித்துள்ளது பின்வருமாறு... 
 
O, A2, A2a, A3, B, B1 என 10 வகையான கொரோனா வைரஸ்கள் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இதில், நான்கு மாதங்களுக்கு முன்பு O வகை வைரஸ் பரவியிருந்தாலும், அதை தற்போது ஏ2ஏ வைரஸ் பாதிப்பு முந்தியுள்ளது. 
 
குறைந்த நாட்களில் அதிவேகமாக பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது இந்த வகை வைரஸ்தான் என்றும் தெரிவித்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்