”லைக்” வரும் என்று எதிர்பார்த்து ”வாந்தி’ வந்தது தான் மிச்சம்… ஏரிக்குள் குதித்தவர்களின் பரிதாப நிலை..

Webdunia
திங்கள், 22 ஜூலை 2019 (15:00 IST)
ஸ்பெயின் நாட்டில், லைக்குகள் வருமென்று ஏரிக்குள் குதிப்பது போல புகைப்படம் எடுத்துகொண்டவர்களுக்கு, வாந்தி, பேதி போன்ற உபாதைகள் வந்துள்ளன.

ஸ்பெயின் நாட்டில் உள்ள மாண்டி நேமே என்ற ஏரி பார்ப்பதற்கு கடல் போல் நீலமாகவும் அழகாகவும் காட்சித் தரக்கூடிய ஏரி. இந்த ஏரியின்  அருகில் நின்று பல சுற்றுலாப் பயணிகள் செல்ஃபி எடுத்துகொள்வது வழக்கம்.

சிலர் சமூக வலைத்தளங்களில் அதிகமாக லைக் வாங்குவதற்காக ஏரியில் குதிப்பது போன்றும், நீச்சல் அடிப்பது போன்றும் புகைப்படம் எடுப்பது வழக்கம். ஆனால் மாண்டி நேமே ஏரி, தங்க்ஸ்டன் தாது சுரங்கத்துடன் இணைக்கப்படிருப்பதால், அந்த ஏரி நச்சு தன்மை வாய்ந்ததாக மாறிவருகிறது. இந்நிலையில் அந்த ஏரியில் குளித்து நீச்சலடிப்பவர்களுக்கு வாந்தி, பேதி, தோல் அரிப்பு போன்ற உடல் உபாதைகள் வருகின்றன. எனவே அந்த ஏரியில் குளிப்பதை தவிர்க்குமாறு ஸ்பெயின் அரசாங்கம் மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.


 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்