சுவிட்சர்லாந்தில் கால்பந்து பயிற்சியாளர் ஒருவர் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் மூலமாக 26 சிறுமிகளுடன் காம களியாட்டம் போட்டது ஒரு சிறுமியின் துணிச்சலான நடவடிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் மேற்கு பகுதியான ரோமண்டியில் வசித்து வரும் அந்த நபர் போலி ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் மூலம் சிறுமிகளை குறிவைத்து பழகி வந்துள்ளார். பின்னர் அவர்களை தன் வலையில் விழ வைத்து அவர்களின் ஆபாச நிர்வாண புகைப்படங்களை அனுப்ப வலியுறுத்தியுள்ளார்.
இதன் விளைவுகளை அறியாத சில சிறுமிகள் தங்கள் நிர்வாண புகைப்படங்களை விளையாட்டாக அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின்னர் அந்த புகைப்படங்களை வைத்து மிரட்டி அந்த சிறுமிகளை நேரலையில் ஆபாசமாக காம லீலையில் ஈடுபட வைத்துள்ளார் அந்த நபர்.
சில சிறுமிகளை தனது வீட்டிற்கே வரவழைத்து அவர்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த செயலை அந்த நபர் கடந்த 5 ஆண்டுகளாக செய்து வந்துள்ளார். இந்த சூழலில் ஒரு சிறுமியிடம் அந்த நபர் இப்படி நடந்துகொள்ள முயற்சிக்கையில் அந்த சிறுமி துணிச்சலாக அதனை தனது பெற்றோர்களிடம் கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர்கள் போலிசில் புகார் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ள அந்த நபர் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இதில் ஆதரப்பூர்வமாக அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும், அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.