இந்த நிலையில் இந்திய தலைவர்கள் மற்றும் உயர் பதவியில் இருப்பவர்களுக்கு எதிராக சமூக வளைதளங்களில் தரக்குறைவான கருத்துகள் பதிவு செய்திருப்பதை மாலத்தீவு அரசாங்கம் கண்டிக்கிறது. இந்தக் கருத்துக மாலத்தீவு அரசின் கருத்துகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை என்று கூறியுள்ளது. மேலும் மோடிக்கெதிராக கருத்து தெரிவித்ததற்காக மரியம் ஷியூனா, மஹ்சூம் மஜித், மல்ஷா ஷரீப் ஆகிய அமைச்சர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.