’ஒயின் பாட்டிலில் கூலிங் கிளாஸுடன் போஸ் கொடுக்கும் காந்தி’

Webdunia
புதன், 3 ஜூலை 2019 (16:27 IST)
இஸ்ரேல் நாட்டில், ஒரு மதுபான நிறுவனம் தனது ஒயின் பாட்டிலில் தேசத்தந்தை காந்தியின் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இஸ்ரேல் நாட்டில் மக்கா பிரேவரி என்ற மதுபான நிறுவனம் மிகவும் பிரபலமான மதுபான நிறுவனம் ஆகும். சில நாட்களுக்கு முன்பு அந்நிறுவனம் தனது ஒயின் பாட்டிலில் இந்தியாவின் தேசத்தந்தை என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தியின் புகைப்படத்தை அச்சிட்டுள்ளது.

அந்த புகைப்படத்தில் காந்தி, வண்ண டீசர்ட் மற்றும் கோட் அணிந்து, கூலிங் கிளாஸுடன் இருப்பது போல் வடிவமைத்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து கேரளாவில் செயல்பட்டு வரும் காந்தி தேசிய அறக்கட்டளை தலைவர் இ.பி.ஏ ஜோஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், இது நம் தேசத் தந்தையான மாகாத்மா காந்தியை இழிவுப்படுத்துவதாகவும், இதனை குறித்து பிரதமர் மோடி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஆம் ஆத்மி எம்.பி.சஞ்சய் சிங், ராஜ்யசபாவில் , நமது தேசப்பிதாவை கேவலப்படுத்தும் விதமாக படம் வெளியிட்ட இஸ்ரேலைச் சேர்ந்த மதுபான நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என இஸ்ரேல் பிரதமரை, பிரதமர் மோடி வலியுறுத்த வேண்டும் எனவும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்