தோண்ட தோண்ட பிணங்கள்! 42 பெண்கள் கொடூரக் கொலை! சிதறி கிடந்த உடல் பாகங்கள்! - அலறவிட்ட சைக்கோ கொலைகாரன்!

Prasanth Karthick

செவ்வாய், 16 ஜூலை 2024 (12:22 IST)

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் இளம்பெண்கள் மர்மமான முறையில் கடந்த சில ஆண்டுகளாக மாயமாகி வந்த நிலையில் இதற்கு பின்னணியில் சைக்கோ கொலைக்காரன் ஒருவன் இருப்பது தெரிய வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் கடந்த 2022ம் ஆண்டு முதலாகவே இளம்பெண்கள் காணாமல் போவது அடிக்கடி நடந்து வந்துள்ளது. முக்கியமாக தலைநகரான நைரோபியில் அதிகமான மாயமாகும் சம்பவங்கள் நடந்துள்ளன. இந்நிலையில் சமீபத்தில் முகுரு சேரி பகுதி அருகே உள்ள குப்பைகள் நிறைந்த பகுதியில் மனித உடல் பாகங்களுடன் கூடிய பிளாஸ்டிக் பைகள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அவற்றை போலீஸார் கைப்பற்றி ஆராய்ந்ததில் அவை ஒரு பெண்ணுடைய உடல்பாகங்கள் என தெரிய வந்துள்ளது. அதைத் தொடர்ந்து போலீஸார் அப்பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டையில் சுமார் 8 வெவ்வேறு பெண்களின் உடல் பாகங்கள் மண்ணில் புதைந்த நிலையிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 8 பெண்களின் உடலும் வெவ்வேறு காலக்கட்டத்தில் கொல்லப்பட்டு அங்கு கொண்டு வந்து போடப்பட்டது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் விரிவான விசாரணை மேற்கொண்டதில் இந்த கொலைகளை செய்தது 33 வயதான காலின்ஸ் ஜுமாய்சி காலுஷா என்று தெரிய வந்துள்ளது.

பல பெண்களை கொன்றுவிட்டு பதட்டமே இல்லாமல் நைரோபியில் உள்ள ஒரு பாரில் சரக்கடித்துக் கொண்டு கால்பந்து மேட்ச்சை பார்த்துக் கொண்டிருந்தா காலின்ஸை போலீஸார் கைது செய்துள்ளனர். அவனிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான பல தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 

ALSO READ: நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொடூரமாக வெட்டிக் கொலை!

சைக்கோ கொலைகாரனான காலின்ஸ் கடந்த 2022ம் ஆண்டு முதலாக பல இளம்பெண்களை தனது வலையில் வீழ்த்தி அவர்களை நைஸாக வீட்டிற்கு அழைத்து சென்று கொடூரமாக கொன்று உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி புதைத்து வந்திருக்கிறான். காலின்ஸால் முதல் முதலில் கொல்லப்பட்டது அவனது மனைவிதான் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தான் கொன்று வெட்டிய பெண்களின் உடல் பாகங்களை குறிப்பிட்ட குப்பைக் கொட்டும் பகுதியிலேயே வாடிக்கையாக புதைத்து வந்திருக்கிறான் சைக்கோ கொலைகாரன் காலின்ஸ். இதனால் போலீஸார் மேலும் அப்பகுதியை தோண்டி வரும் நிலையில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட பெண்களின் அடையாளங்களை கண்டுபிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். இதுவரை சைக்கோ கில்லர் காலின்ஸால் 42 பெண்கள் கொடூரமாக கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது கென்யாவையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்