இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை : அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

Webdunia
செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (12:01 IST)
தாலிபன்கள் இவ்வளவு வேகமாக முன்னேறுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

 
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தாலிபன்கள் கைப்பற்றியது தொடர்பாக அவர் ஆற்றிய உரையின்போது இதைக் குறிப்பிட்டார். ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை விலக்கிக் கொண்டது விவகாரத்தில் தாம் தொடர்ந்து உறுதியாக இருப்பதாகத் தெரிவித்த அவர், ஐந்தாவது அதிபர் ஒரு ஒரு போர் தொடரக்கூடாது என்று குறிப்பிட்டார்.
 
தேசத்தைக் கட்டமைப்பது, ஜனநாயகத்தை மேம்படுத்துவது என்பதெல்லாம் தங்களது போரின் நோக்கமல்ல என்று கூறிய அவர், அமெரிக்க மண்ணில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படுவதைத் தடுப்பது மட்டும்தான் தங்களது நோக்கம் என்று கூறினார்.
 
எதிர்பார்த்ததைவிட நிகழ்வுகள் மிக வேகமாக நடந்துவிட்டன என்பதை பைடன் ஒப்புக் கொண்டார். அமெரிக்கப் படைகளை தாலிபன்கள் தாக்கினார், கடுமையான பதிலடி இருக்கும் என்றும் அவர் எச்சரித்தார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்