அமெரிக்கா தற்போது வேலைவாய்ப்பு, கொரோனா வைரஸ், இனவாதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரும் நிலையில் நேற்று அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றார் ஜோபைடன்.
அதிபராக பதவியேற்ற பின் அவர் நாட்டு மக்களிடையே பேசியபோது வேலைவாய்ப்பு குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் அனைத்தையும் புதிதாக தொடங்குவோம். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம், அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் கண்டிப்பாக அமெரிக்காவை முன்னேற்ற முடியும் என்று கூறினார்