பெண்களின் கண்ணீரைத் துடைக்க வாடகை ஆண்கள்

Webdunia
சனி, 19 செப்டம்பர் 2015 (20:52 IST)
பெண்களுக்கு ஆறுதல் கூறுவதற்கு, ஆண்களை வாடகைக்கு விடும் ஒரு புதிய முறையை ஒரு சீன நிறுவனம் தொடங்கியுள்ளது.


 
ஐக்கேம்மேசோ டான்ஷி என்ற நிருவனம், பெண்களுக்கு சேவை செய்வதற்காக அழகான ஆண்களை பணியமர்த்தியுள்ளது. மன அழுத்தத்தில் உள்ளவர்கள், தங்கள் துன்பங்களை பகிரக்கூட ஒரு ஆண் துணை இல்லாதவர்கள் இந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு, தங்களுக்கு பிடித்தமானவர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
 
ஆணாதிக்கமுள்ள சூழ்நிலையில், வேலை செய்யும்போது ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்க இந்த ஆண்கள் உதவி செய்வார்கள். அந்தப் பெண்களுடன் அமர்ந்து படம் பார்ப்பது, அவர்கள் அழுதால் அவர்களின் கண்ணீரை துடைப்பது, அவர்களின் தோளில் கைவைத்து ஆறுதல் சொல்வது என இவர்கள் அந்த பெண்களுக்கு உதவுவார்கள்.
 
இதற்கு ஏழாயிரத்து அறுநூறு யென் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் நான்காயிரம்) கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 
 
பாவம்!. சில ஜப்பான் பெண்களுக்கு துக்கம் வந்தால் தோல் சாய்ந்து அழுவதற்கும், ஆறுதல் சொல்வதற்கும் ஆண் துணை இல்லாமல் போய்விட்டது போலும்.