ஈராக் நாட்டை சேர்ந்த சிறுமி சிகிச்சைக்காக சீனா சென்று கொண்டிருந்த நிலையில் விமானத்திலேயே அவரது உயிர் பிரிந்த பரிதாபமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஈராக் நாட்டை சேர்ந்த 16 வயது சிறுமி சிறுநீரக கோளாறு காரணமாக சீனாவில் சிகிச்சை பெற பயணம் செய்தார். நடு வானில் அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் விமானத்திலேயே அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து ஈராக்கில் இருந்து சீனா செல்ல வேண்டிய விமானம் கொல்கத்தாவுக்கு திருப்பி விடப்பட்டு அங்கு அவசரமாக தரையிறக்கப்பட்டது. சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு நாடித்துடிப்பு, இதய துடிப்பு இல்லை என்பதை கண்டறிந்து அந்த சிறுமி இறந்து விட்டதாக அறிவித்தனர்.
இதனை அடுத்து பெற்றோர்கள் மிகவும் சோகத்துடன் இறுதிச் சடங்கு செய்வதற்காக மீண்டும் ஈராக் நாட்டிற்கு சிறுமியின் பிணத்துடன் சென்றுள்ளனர். சீனாவுக்கு சிகிச்சைக்காக சென்று கொண்டிருந்த 16 வயது சிறுமி விமானத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.