முன்னாள் வங்கதேச அதிபர் ஷேக் ஹசீனா வங்கதேசத்திலிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள நிலையில் அவரை இந்தியாவிலிருந்து நாடு கடத்த வேண்டும் என்று வங்கதேசம் கூறிவருகிறது. இந்நிலையில் தற்போது அந்நாடு இன்டர்போல் அமைப்பை நாடி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
வங்கதேசத்தில் இட ஒதுக்கீட்டை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி போராட்டம் உச்ச கட்டத்தை அடைந்ததால் அந்நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
ஐரோப்பிய நாடுகளில் அவர் செல்ல விருப்பப்பட்ட நிலையில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் இந்தியாவிலேயே அவர் தொடர்ந்து தங்கி உள்ளதாகவும் மனிதாபிமான அடிப்படையில் இந்தியா அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இன்டர்போல் மூலம் விரைவில் சிவப்பு நோட்டீஸ் பிறப்பிக்கப்படும் என்றும் வங்கதேசத்திலிருந்து தப்பியவர்கள் உலகில் எங்கு இருந்தாலும் அவர்கள் அவர்களை மீண்டும் வங்கதேசத்திற்கு அழைத்து வந்து நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் வங்கதேச சட்ட விவகாரத்துறை ஆலோசகர் தெரிவித்துள்ளனர்.
போராட்டத்தின் போது நடந்த படுகொலைகள் தொடர்பாக ஹசீனா மீது 60க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், அவரை இந்தியாவில் இருந்து நாடு கடத்தி வங்கதேசத்திற்கு அழைத்து வந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.