ஜாதவ்வை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்றிய இந்தியா

Webdunia
புதன், 10 மே 2017 (04:01 IST)
பாகிஸ்தான் நாட்டின் நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இந்திய கடற்படை அதிகாரி ஜாதவின் தூக்கு தண்டனையை உடனடியாக நிறுத்துமாறு சர்வதேச நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை விடுத்துள்ளதால் இந்தியா நிம்மதி அடைந்துள்ளது.



 


உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஜாதவுக்கு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் சமீபத்தில் தூக்கு தண்டனையை விதித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இந்தியா, ஜாதவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கை விசாரணை செய்த சர்வதேச நீதிமன்றம் இந்தியா கோரிய மனுவை பரிசீலித்து, ஜாதவிற்கு பாகிஸ்தான் நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் ஜாதவ் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் உள்ளது. மேலும் இந்த வழக்கில் இருந்து அவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற இந்தியாவின் மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்