பேயாட்டம் ஆசிய இந்தோனேசியா சுனாமி – பலி எண்ணிக்கை 373 ஆக உயர்வு

Webdunia
செவ்வாய், 25 டிசம்பர் 2018 (13:06 IST)
இந்தோனேசியாவின் சுந்தா ஜலசந்தியில் ஜாவா, சுமத்ரா தீவுகளுக்கு இடையே ஏற்பட்ட சுனாமியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 373 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையில் அமைந்துள்ள சுந்தா நீரிணை ஜாவா கடலையும், இந்தியப் பெருங்கடலையும் இணைக்கிறது. இந்த நீரிணையில் அமைந்துள்ள க்ரகடோவா தீவில் இருக்கும் எரிமலை வெடித்ததால் சுனாமி ஏற்பட்டது.
 
இந்த சுனாமியால் பன்தேக்லங், தெற்கு லாம்பங் மற்றும் சேராங் பகுதிகளில் அதிகளவில் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.  புத்தாண்டைக் கொண்டாட வெளிநாட்டில் இருந்து வந்த பயனிகள் பலரையும் காணவில்லை
 
சுனாமியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 373 ஆக அதிகரித்துள்ளது, 850-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், சுனாமி தாக்கியப் பலப் பகுதிகளுக்கு மீட்புப்படையினர் செல்ல முடியவில்லை அதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்