சீன விமானங்களை வீழ்த்த ஏவுகணை படை! – ரெடியான இந்தியா!

புதன், 26 ஆகஸ்ட் 2020 (10:24 IST)
இந்தியா –சீனா இடையே மோதல் எழுந்த நிலையில் சீன விமானங்களை வீழ்த்த ஏவுகணை படையை லடாக்கில் நிறுத்தியுள்ளது இந்தியா.


கடந்த சில மாதங்களுக்கு முன்பு லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் சீன – இந்திய படைகள் இடையே ஏற்பட்ட மோதலில் இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. அதை தொடர்ந்து சீன – இந்தியா இடையே போர் பதற்றம் நீடித்து வருகிறது. பேச்சு வார்த்தைகள் மூலம் போர் பதற்றத்தை தணிக்க ராணுவ அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் சீனாவின் ராணுவ ஹெலிகாப்டர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்றது. சீனாவின் இந்த முயற்சி இந்தியாவால் முறியடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து சீனா வான் வழியாக அத்துமீறுவதை தடுக்க சிறிய ரக ஏவுகணைகளை ஏவி விமானங்களை அழிக்கும் தனிப்படை பிரிவு லடாக் எல்லையில் அமைக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்