உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.4 கோடியாக உயர்வு என்பதும், கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 8.22 லட்சமாக உயர்வு என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதே நேரத்தில் கொரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 1.6 கோடியாக உயர்ந்துள்ளது
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 59 லட்சமானது என்பதும், அமெரிக்காவில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 1.82 லட்சமாகும் என்பதும், அமெரிக்காவில் புதிதாக கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 39,191 ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது
அமெரிக்காவை அடுத்து பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,674,176 என்பதும், பிரேசிலில் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 116,666 என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,231,754 என்பதும், பிரேசிலில் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 59,612என்பதும் குறிப்பிடத்தக்கது.