குளிக்க முடியாது என சொன்ன மனைவியை சுட்டு கொன்ற கணவர்.. 226 ஆண்டுகள் சிறைத்தண்டனை..!

Mahendran
சனி, 13 ஜூலை 2024 (11:41 IST)
துர்நாற்றம் வீசுகிறது குளித்து விட்டு வா என்று மனைவியை கணவன் கூறிய நிலையில் முடியாது எனக் கூறிய மனைவியை கணவன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் கணவருக்கு 226 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள ஸ்டீபன் என்பவர் தனது மனைவி வெரோனிகா வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு வந்தபோது துர்நாற்றமாக இருந்ததால் குளிக்கும் படி கூறினார். ஆனால் அவரது மனைவி மறுத்துவிட்டார்.

அதனால் ஆத்திரமடைந்த ஸ்டீவன் துப்பாக்கியை எடுத்து மனைவியை சுட்டுக் கொன்று விட்டார். இந்த கொலை மட்டுமின்றி அவர் இன்னொரு பெண்ணையும் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக விசாரணையில் தெரிய வந்தது.

இதனை அடுத்து ஸ்டீபன் மீது வழக்கு பதிவு செய்து கடந்த இரண்டு ஆண்டுகளாக வழக்கு நடந்து வந்தது. இதனை அடுத்து இரண்டு பேரை கொலை செய்ததற்காக 99 ஆண்டுகள் வீதம் 198 ஆண்டுகளும், அதில் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததுக்காக 28 ஆண்டுகள் என மொத்தம் 226 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குளிக்கவில்லை என்ற ஒரு சாதாரண காரணத்திற்காக ஆத்திரப்பட்டு துப்பாக்கியால் மனைவியை கொலை செய்த ஸ்டீபன் தற்போது ஆயுள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்