40 மொழிகளை மொழி பெயர்க்கின்றது கூகுளின் பிக்சல் பட்ஸ் ஹெட்போன்

Webdunia
வெள்ளி, 6 அக்டோபர் 2017 (00:18 IST)
கூகுள் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஆச்சரியம் தரும் வசதிகளை அவ்வப்போது அறிமுகம் செய்து வரும் நிலையில் தற்போது லேட்டஸ்ட் டெக்னாலஜியில் அமைந்த ஹெட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.



 
 
பிக்சல் பட்ஸ் என்று அழைக்கப்படும் இந்த ஹெட்போன், சுமார் 40 மொழிகளை மொழிபெயர்த்து நமக்கு அளிக்கும். உதாரணமாக ஜப்பான் மொழி தெரிந்த ஒருவரிடம் பேச வேண்டும் என்றால் Help me japan language என்று கூறிவிட்டு சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டால் நாம் பேசியவை அனைத்தும் ஜப்பான் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு நாம் போன் செய்தவருக்கு கொண்டு போய் சேர்க்கும்
 
இந்த வசதியை நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்றால் குறைந்தபட்சம் கூகுள் அசிஸ்டென்ஸ் ஆதரவு பெற்ற நௌகட் 7.0 இயங்குதளத்தை பெற்ற ஆண்ட்ராய்டு அல்லது கூகுள் பிக்சல் மொபைல்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஹெட்போனின் விலை ரூ.10,300 என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்