அமெரிக்காவில் கருக்கலைப்பு சட்டம் அமல்: கூகுள் எடுத்த அதிரடி முடிவு!

Webdunia
திங்கள், 27 ஜூன் 2022 (15:12 IST)
அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்து கொள்வதற்கான அடிப்படை உரிமையை ரத்து செய்வதாக அந்நாட்டின் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் இந்த தீர்ப்புக்கு எதிராக பல பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்
 
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூட இந்த தீர்ப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் ஒரு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது
 
அதன்படி அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் கருகலைப்பு செய்ய விரும்பும் ஊழியர்கள் தங்கள் பணியிடங்களை மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது
 
ஊழியர்களின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் பெண்களின் நலன் மற்றும் ஆரோக்கியம் கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்