அட்டாக் பண்ணிடுவாங்களோ..! உலக மக்கள் உற்று கவனித்த ஒற்றை விமானம்!

Webdunia
புதன், 3 ஆகஸ்ட் 2022 (09:27 IST)
அமெரிக்க மக்கள் பிரதிநிதி நான்சி பெலோசி தைவான் சென்ற விமானத்தை உலக மக்கள் உற்று கவனித்த சம்பவம் புதிய சாதனையை படைத்துள்ளது.

சீனா – தைவான் இடையே நீண்ட காலமாகவே மோதல் இருந்து வரும் நிலையில் தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா இருந்து வருவது சீனாவை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் அமெரிக்க மக்கள் பிரதிநிதி நான்சி பெலோசி தைவானுக்கு செல்வதாக அமெரிக்க அறிவித்தது.

இதற்கு சீனா கடும் கண்டனங்களை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் தைவான் எல்லையருகே ஏவுகணை உள்ளிட்ட ஆயுதங்களையும் நிலைநிறுத்தி வைத்தது. இதனால் நான்சி பெலோசியின் பயணம் உலக மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் மக்கள் பலர் நான்சி பெலோசி பயணிக்கும் விமானத்தை, விமானங்களின் ரேடாரை கண்காணிக்கும் பிளைட் ரேடார் 24 என்ற செயலி மூலம் தொடர்ந்து கண்காணித்துள்ளனர். பலர் புதிதாக இந்த செயலியை பதிவிறக்கியுள்ளனர்.

இதுகுறித்து ப்ளைட் ரேடார் 24 செயலியின் தொடர்பு இயக்குனர் கூறியபோது சுமார் 7 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஒரே நேரத்தில் நான்சி பெலோசியின் விமானத்தை செயலி மூலமாக தொடர்ந்து கண்காணித்து வந்ததாகவும், உலகிலேயே அதிகமான மக்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்ட விமான பயணம் இது என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்