ராணுவத்தில் இணைந்த முதல் திருநங்கை....

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2016 (11:56 IST)
இங்கிலாந்து ராணுவ தரைப்படையில் திருநங்கை ஒருவரை பணியாற்ற அந்நாட்டு அரசு அனுமதித்துள்ளது.

 
சோலோ அலென் என்ற நபர் 2012ல் இங்கிலாந்து ராணுவத்தில் சேர்ந்தார். அதன் பின் அவர் உடலில் ஹார்மோன் மாற்றம் ஏற்பட்டுள்ளதை உணர்ந்த அலென் பெண்ணாக மாறும் முயற்சியில் ஈடுபட்டார்.
 
ஒரு வழியாக பெண்ணாக மாறிய அலென் தனது பெயரை பென் என மாற்றிக் கொண்டதோடு, தனது அனைத்து சான்றிதழ்களிலும் பெயரை மாற்றியுள்ளார். கடைசியாக தான் பணியாற்றும் ராணுவ அலுவலகத்திலும் பெண்ணாக மாறிவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், இங்கிலாந்து நாட்டிற்கு சேவை செய்வதுதான் எனது ஆர்வம் எனவும் தெரிவித்துள்ளார்.
 
இதையடுத்து அவரை பெண்கள் பணியாற்றும் ராணுவத்தில் மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இவர் ராணுவத்தில் இணையும் பட்சத்தில், திருநங்கை ஒருவர் இங்கிலாந்து ராணுவத்தில் சேர்ந்தது இதுவே முதல் முறையாகும்.
அடுத்த கட்டுரையில்