ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடங்கியது.. பயனர்கள் அவதி!

Sinoj

செவ்வாய், 5 மார்ச் 2024 (22:30 IST)
ஃபேஸ்புக், இன்ஸ்டா முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள உலகம் முழுவதிலும் உள்ள  இதன் பயனர்கள்  எக்ஸ் தளத்தில்#instagramdown , #CyberAttack ஹேஸ்டேக் டிரெண்டிங் செய்து  வருகின்றனர்.
 
உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான மக்கள் ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
 
இந்த நிலையில், இது மக்கள் மட்டுமின்றி, விளையாட்டு நட்சத்திரங்களும், சினிமா ஸ்டார்களும், சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்காள், பெரிய  நியூஸ் மீடியாக்களும், நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் உள்ளிட்டோரும் இந்த பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாவில் இயங்கி வருகின்றனர். 
 
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஏர்டெல்     நெட்வொர்க் முடங்கியது மாதிரி இன்று  உலகம் முழுவதும் பல கோடி மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டா  ஆப்கள் திடீரென்று முடங்கியது. இதைப்பயன்படுத்த முடியாமல் பயனர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். விரைவில் இது சரிசெய்யப்படும் என தெரிகிறது.
 
ஃபேஸ்புக், இன்ஸ்டா முடக்கத்திற்கு எக்ஸ் நிறுவன அதிபர் எலான் மஸ்க் கிண்டல் அடித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
 
ஃபேஸ்புக், இன்ஸ்டா முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள உலகம் முழுவதிலும் உள்ள  இதன் பயனர்கள்  எக்ஸ் தளத்தில்#instagramdown , #CyberAttack ஹேஸ்டேக் டிரெண்டிங் செய்து  வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்