மாடுகளுக்கு பீர் கொடுத்து வளர்க்கும் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க்.. புதிய பிசினஸ் தொடக்கம்..!

Siva

வியாழன், 11 ஜனவரி 2024 (11:25 IST)
பேஸ்புக் நிறுவனர் மார்க் சுக்கர்பெர்க் புதிய பிசினஸ் ஒன்றை தொடங்கி இருப்பதாகவும் அவர் மாட்டு இறைச்சி தொழில் செய்ய முடிவு செய்திருப்பதாகவும் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.

தங்கள் நிறுவனத்தின் சிறந்த மாட்டு இறைச்சியை உருவாக்குவதற்காக தங்கள் பண்ணையில் உள்ள மாடுகளுக்கு உலர் கொட்டைகள், உள்ளூரில் தயாரிக்கப்படும் பீர் ஆகிவற்றை கொடுத்து வளர்த்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய எல்லா பிசினஸ்களையும் காட்டிலும் இந்த பிசினஸ் சுவையான ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் மாட்டு இறைச்சி உண்ணும் புகைப்படத்தையும் பதிவு செய்து  பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் உரிமையாளரான மார்க் சுக்கர்பெர்க் திடீரென மாட்டிறைச்சி பிசினஸ் தொடங்கியுள்ளதை அடுத்து அவருக்கு ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்