அமெரிக்காவின் ஆட்சி மொழியாக ஆங்கிலத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் டொனால்டு ட்ரம்ப்
அமெரிக்காவில் பிரிட்டிஷார் குடியேற்றத்திற்கு முன்னர் இருந்த செவ்விந்திய இனக்குழுக்களின் மொழி, கருப்பு அடிமைகளாக வந்த மக்களின் மொழி, பிரிட்டிஷாரின் ஆங்கிலம், பிரெஞ்சு உள்ளிட்ட சுமார் 350 மொழிகள் புழக்கத்தில் உள்ளன. இந்நிலையில் அமெரிக்க அரசிடம் நிதி பெறும் அமைப்புகள், ஃபெடரல் அரசு நிர்வாகம் ஆகியவை பிராந்தியம் சார்ந்த மொழிகளில் இயங்கி வரும் நிலை உள்ளது. இதனால் அவர்களுக்கு தேவையான மொழிபெயர்ப்பு உதவிகளை அமெரிக்க அரசே செய்து வந்தது.
இந்நிலையில்தான் இனி அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ அரசு மொழி ஆங்கிலம் மட்டுமே என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இனி பிற மொழிகளுக்கான மொழிபெயர்ப்பூ உதவிகள் அரசு மூலமாக கிடைக்காது என்றும், அவற்றை அந்தந்த அமைப்புகளே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நிலையும் உருவாகியுள்ளது. இது அமெரிக்காவில் நிலவி வந்த மொழி மீதான பன்முகத்தன்மையில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என பலரும் கண்டனம் தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர்.
ஆனால் உலக அளவில் ஆங்கிலம் பேசுபவர்களில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் அமெரிக்காவில் வசித்து வரும் நிலையில், அமெரிக்க ஆங்கிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கில் இந்த அறிவிப்பு உள்ளதாக ட்ரம்ப் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
Edit by Prasanth.K