தினமும் 22 மணி நேரம் தூங்கும் பெண்.. அரிய வகை நோயால் பாதிப்பு..!

Webdunia
வெள்ளி, 3 மார்ச் 2023 (13:09 IST)
தினமும் 22 மணி நேரம் தூங்கும் பெண்.. அரிய வகை நோயால் பாதிப்பு..!
அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள பெண் ஒருவர் தினமும் 22 மணி நேரம் தூங்குவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 38 வயதான ஜோனா என்ற பெண் கடந்து சில ஆண்டுகளாக அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் எப்போதும் சோர்வாக இருப்பதாகவும் எப்போது பார்த்தாலும் தூங்க வேண்டும் என்ற உணர்வு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஒரு நாளின் 24 மணி நேரத்தில் சுமார் 22 மணி நேரம் அவர் தூங்குவதாகவும் இதனால் தனது கணவர் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான சேவைகளை கூட செய்ய முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தான் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருவதாகவும் பல மருத்துவர்கள் பார்த்து சிகிச்சை செய்தும் தனக்கு முறையான சிகிச்சை கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
மற்றவர்களைப் போல் தன்னால் இயல்பாக வாழ முடியவில்லை என்றும் தனக்கு சரியான மருத்துவம் கிடைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தினமும் 22 மணி நேரம் ஒரு பெண் தூங்குகிறார் என்ற தகவல் பெறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்