செவ்வாய் கிரகத்தில் மனித இனப்பெருக்கம்.. உயிரணு வழங்கினாரா எலான் மஸ்க்?

Siva

ஞாயிறு, 14 ஜூலை 2024 (16:09 IST)
செவ்வாய் கிரகத்தில் மனித இனப்பெருக்கம் செய்வதற்காக எலான் மஸ்க் தனது உயிரணுவை தானமாக வழங்கியதாக அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் தனது சொந்த உயிரணுவை செவ்வாய் கிரகத்தில் மனித இனப்பெருக்கம் செய்யும் ஆராய்ச்சிக்காக தானமாக அளித்துள்ளார் என்று அமெரிக்க செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் உயிருடன் வாழும் சூழலை ஆராய ஸ்பேஸ் எக்ஸ் என்ற எலான் மஸ்க் நிறுவனம் முயற்சி செய்து கொண்டிருக்கும் நிலையில் இந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு உயிரணுவை தானமாக எலான் மஸ்க்  வழங்கியிருந்தார் என்று அந்த செய்திகள் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் இந்த செய்தியை எலான் மஸ்க் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த செய்தியில் உண்மை தன்மை இல்லை என்றும் தான் யாருக்கும் உயிரணுக்களை தானமாக அளிக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.

ஆனால் அதே நேரத்தில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் ஆராய்ச்சியில் எலான் மஸ்க் அவர்களின் ஸ்பேஸ் நிறுவனம் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்