மருந்து இல்லாமல் நோயாளிகள் இறக்கும் நிலை - இலங்கை அரசை எச்சரிக்கும் மருத்துவர்கள்!

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (10:22 IST)
மருந்து தட்டுப்பாடு சீராகவில்லை என்றால் நோயாளிகள் இறக்கும் நிலை ஏற்படும் என மருத்துவர்கள் சங்கம் எச்சரிக்கை. 

 
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் ஏற்றுமதி, இறக்குமதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கே திண்டாடும் நிலையில் பல பகுதிகளிலும் அரசை எதிர்த்து போராட்டங்களை தொடங்கி உள்ளனர். இதனால் இலங்கை அரசே கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போது இலங்கை அரசின் வருவாயை அதிகரிக்க அரசு திட்டமிட்டு வருகிறது. 
 
இந்நிலையில் இலங்கையில் உணவுப்பொருட்கள், எரிபொருள், மின்சார தட்டுப்பாட்டை தொடர்ந்து மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மின்வெட்டு காரணமாக ஸ்கேன் உள்ளிட்ட சேவைகள் கூட ஸ்தம்பித்துள்ளன. மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைக்கான மருந்துகள் கூட இல்லாத நிலை உள்ளதாக இலங்கை மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
 
இன்னும் சில நாட்களில் மருந்து தட்டுப்பாடு சீராகவில்லை என்றால் நோயாளிகள் இறக்கும் நிலை ஏற்படும் என மருத்துவர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்