மருத்துவப் பணியாளர்களுக்கு இலவசமாக 10,000 காலணிகள் ! -

Webdunia
புதன், 1 ஏப்ரல் 2020 (08:19 IST)
அமெரிக்காவில் கொரோனா பணிகளில் ஈடுபடும் மருத்துவப் பணியாளர்களுக்காக இலவசமாக காலணிகளை வழங்க க்ராக்ஸ் எனும் நிறுவனம் முன்வந்துள்ளது.

உலகம் முழுவதும் 8 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் எண்ணிக்கை 42,000 ஐத் தாண்டியுள்ளது. இந்த வைரஸ் சாமான்ய மக்கள் அல்லாது அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்கள் எனப் பலரையும் பாதித்துள்ளது. வைரஸ் தாக்குதலில் இருந்து தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள தனிமைப் படுத்திக் கொள்ளுதலே ஒரே வழி என்று சொல்லப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா வைரஸால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்க முதன்மையானதாக இருக்கிறது. இதுவரை அமெரிக்காவில் 1.6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மருத்துவப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு 10,000 கிராக்ஸ் வகை  இலவசக் காலணிகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  polymer resin கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த காலணிகள் கழுவுவதற்கு வசதியாக இருப்பதாக பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்