ஐபோன விட்டுட்டு சைனா செட்டுக்கு மாறுங்க: டிரம்ப்புக்கு அட்வைஸ்

Webdunia
வெள்ளி, 26 அக்டோபர் 2018 (16:43 IST)
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மொபைல்போன் அழைப்புக்கள் ஒட்டு கேட்கப்படுவதாக வெளியான குற்றச்சாட்டிற்கு சீனா தக்க பதிலடி கொடுத்துள்ளது. 
 
சமீபத்தில், டிரம்ப்பின் ஆப்பிள் ஐபோன் அழைப்புகளை சீனா மற்றும் ரஷ்யா ஒட்டு கேட்பதாக நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி மூலமாக குற்றச்சாட்டை முன்வைத்திருந்தது. 
 
இந்த குற்றச்சாட்டுக்கு, ஆப்பிள் ஐபோனுக்கு பதிலாக சீனாவில் தயாரிக்கப்படும் பயன்படுத்துமாறு, சீனா மறுப்பை தெரிவித்தபோது பதில் அளித்துள்ளது. 
 
மேலும், நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் இந்த செய்தியை எழுதியவருக்கு சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது கொடுக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்