போகோ ஹரம் தீவிரவாத அமைப்பில் பெண்கள்: அதிர்ச்சித் தகவல்

Webdunia
சனி, 5 ஜூலை 2014 (16:57 IST)
நைஜீரியாவில் போகோ ஹரம் அமைப்பைச் சேர்ந்த 3 பெண் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

நைஜீரியாவில் அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் போகோ ஹரம் தீவிரவாத அமைப்பு மக்களுக்கு பல்வேறு துன்பங்களை ஏற்படுத்தி வருகின்றது. இவர்களது தாக்குதலில் சிக்கிப் பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் பலியாகி உள்ளனர்.

போகோ ஹரம் தீவிரவாதிகளை ஒழிக்க நைஜீரிய அரசும், அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் போகோ ஹரம் தீவிரவாத அமைப்பில் ஆண்கள் மட்டும் அல்லாது பெண்கள் பிரிவும் இயங்கி வருகிறது என்னும் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

அவர்களுள் 3 பெண் தீவிரவாதிகளை நைஜீரிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அந்தப் பெண்கள் மதகாலி என்னும் நகருக்குச் சென்று கொண்டிருந்த போது பிடிபட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரர் மாதம் பள்ளி ஒன்றுக்குள் நுழைந்து 300 மாணவிகளை போகோ ஹரம் தீவிரவாதிகள் கடத்திச் சென்றது குறிப்பிடத்தக்கது.