சூரிய கிரகணத்தின்போது பிறந்த குழந்தைக்கு வித்தியாசமான பெயர் வைத்த தம்பதி

Webdunia
வெள்ளி, 25 ஆகஸ்ட் 2017 (07:02 IST)
அமெரிக்காவில் சமீபத்தில் 90 ஆண்டுகளுக்கு பின்னர் முழு சூரிய கிரகணம் தெரிந்தது என்பது அனைவரும் தெரிந்ததே. இந்த நிலையில் சூரிய கிரகணம் நிகழ்ந்து கொண்டிருக்கும்போது பிறந்த குழந்தைக்கு பெற்றோர்கள் வித்தியாசமான பெயர் ஒன்றை வைத்துள்ளனர்.



 
 
சூரிய கிரகணம் நடந்து கொண்டிருந்தபோது  தெற்கு கரோலினா மாகாணத்தில் உள்ள கிரீன்வில்லே மருத்துவமனையில் ஃப்ரீடம் யுபங்ஸ் எனப்வருக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு சூரிய கிரகணத்தை குறிக்கும் எக்லிப்ஸ் என்ற பெயரை அந்த பெற்றோர்கள் தேர்வு செய்தனர்.
 
மேலும் எக்லிப்ஸ் என்று பெயர் வைக்கப்பட்ட அந்த குழந்தைக்கு மருத்துவமனை நிர்வாகிகல் சிறப்பு உடையை பரிசாக அளித்தனர். இதற்கு முன்னர் அமெரிக்காவில் சூரிய கிரகணத்தின் பெயரில் குழந்தைகளுக்கு பெயர் வைத்ததாக இதுவரை எந்த தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
அடுத்த கட்டுரையில்