இதுக்கு இல்லயா சார் ஒரு END - வார இறுதியில் 5 துப்பாக்கி சூடு!

Webdunia
திங்கள், 13 ஜூன் 2022 (10:09 IST)
வார இறுதியில் சிகாகோ நகரத்தில் மொத்தம் ஐந்து துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

 
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வந்த நிலையில் துப்பாக்கி பயன்பாட்டை கட்டுப்படுத்தும் புதிய சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களை அந்நாட்டு மக்களே கண்டித்து வரும் நிலையில், துப்பாக்கி பயன்பாட்டிற்கு எதிராக சட்டம் இயற்றப்படும் என அதிபர் ஜோ பைடன் அறிவித்திருந்தார்.
 
இந்நிலையில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் கீழ்சபையில் துப்பாக்கி வாங்குவதற்கான வயது வரம்பை உயர்த்துதல் உள்ளிட்ட புதிய விதிகளுடன் கூடிய சட்ட மசோதா ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. இதில் மசோதாவுக்கு ஆதரவாக 223 வாக்குகளும், எதிராக 204 ஓட்டுகளும் பதிவாகின. ஆதரவாக அதிகம் வாக்குகள் கிடைத்துள்ள நிலையில் இது அடுத்து செனட் சபை ஒப்புதலுக்கு செல்லும் என கூறப்படுகிறது.
 
இது ஒரு பக்கம் இருக்க பயமின்றி அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆம், அமெரிக்காவின் சிகாகோ நகரில் பலவேறு இடங்களில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர், சுமார் 27 பேர் காயமடைந்துள்ளனர். வார இறுதியில் சிகாகோ நகரத்தில் மொத்தம் ஐந்து துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்