தலிபான்களுக்கு ஆதரவு தெரிவித்த ஆப்கன் முன்னாள் பிரதமரின் சகோதரர்!

Webdunia
சனி, 21 ஆகஸ்ட் 2021 (16:36 IST)
ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனியின் சகோதரர் தாலிபன்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய நிலையில் அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி தனது குடும்பத்தினருடன் ஆப்கானிஸ்தானை விட்டு தப்பி சென்றார். இந்நிலையில் அவர் தற்போது அரபு அமீரகத்தின் பாதுகாப்பில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக அஷ்ரப் கனி பல மில்லியன் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டதாக வெளியான குற்றச்சாட்டுக்கு அஷ்ரப் கனி மறுப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள தஜிகிஸ்தான் நாட்டிற்கான ஆப்கன் தூதர் ஒருவர் அஷ்ரப் கனி தப்பி சென்றபோது 169 மில்லியன் அமெரிக்க டாலர்களை எடுத்து சென்றதாகர் சொல்லப்பட்டது.

இந்நிலையில் அஷ்ரப் கனியின் சகோதரர் ஹஷ்மத் கனி அக்மத்சாய் தாலிபன்களுக்கு ஆதரவு அளித்துள்ளார். தாலிபான் தலைவர் கலீல் உர் ரெஹ்மான் மற்றும் மதத் தலைவர் முஃப்தி மக்மூத் ஸாகிர் ஆகியோரை சென்று சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்துள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்