ஆயிரக்கணக்கான மத்திய அமெரிக்க நாடுகளை சேர்ந்த குடியேறிகள் வடக்கு திசையில் மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவை நோக்கி வருவதால் 5200க்கும் மேற்பட்ட தமது வீரர்களை மெக்ஸிகோ எல்லைக்கு அனுப்பி உள்ளது அமெரிக்கா. தங்கள் நாடுகளில் தங்களுக்கென எந்த பொருளாதார வாய்ப்பும் இல்லை.
எப்படியாவது அமெரிக்கா சென்று விட்டால் வாழ்வு மாறும், வசந்தம் வரும், இதுவெல்லாம் நிகழாவிட்டாலும் தங்கள் குழந்தைகள் வன்முறையிலிருந்து தள்ளி இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் அமெரிக்கா நோக்கி மத்திய அமெரிக்க நாட்டு மக்கள் ஊர்வலமாக சென்று கொண்டிருக்கிறார்கள்.
இவர்களை அமெரிக்காவிற்குள் அனுமதிக்க முடியாதென அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதியாக கூறி உள்ளார்.