ஆப்பிள் டெய்லி நாளிதழின் கடைசி இதழ்: அதிகாலையிலேயே விற்பனையான 10 லட்சம் பிரதிநிதிகள்!

Webdunia
வியாழன், 24 ஜூன் 2021 (15:45 IST)
ஆப்பிள் டெய்லி நாளிதழின் கடைசி இதழ்:
சீனாவின் ஹாங்காங்கில் கடந்த 26 ஆண்டுகளாக ஆப்பிள் டெய்லி என்ற நாளிதழில் வெளியானது. இந்த நாளிதழ் ஜனநாயகத்துக்கு ஆதரவான செய்திகளை வெளியிட்டு வந்த நிலையில் இந்தசெய்தி நிறுவனத்தின் 11 கோடி ரூபாய் சொத்துக்கள் திடீரென சீன அரசால் முடக்கம் செய்யப்பட்டன.
 
அதுமட்டுமின்றி ஆப்பிள் டெய்லி பத்திரிகையின் ஐந்து ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து வந்த ஆப்பிள் டெய்லி நிறுவனம் இன்றுடன் தனது அச்சக பதிப்பை நிறுத்துவதாக அறிவித்தது. இதனையடுத்து இன்று வெளியாகும் இதழ் தான் ஆப்பிள் டெய்லியின் கடைசி இதழ் என்று பொதுமக்களிடயே தகவல் பரவியது
 
இதனையடுத்து இன்றைய இதழை வாங்குவதற்கு ஹாங்காங் மக்கள் நீண்ட வரிசையில் நின்ற நிலையில் இதழ் வெளியான ஒருசில மணி நேரங்களில் சுமார் 10 லட்சம் பிரதிகள் விற்பனையாகிவிட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்