ஆஸ்திரேலியா நாட்டில், பிரதமர் ஆண்டனி அல்பனேசி தலைமையிலான ஆஸ்திரேலியா லேபர் பார்டி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளைப் போன்று இங்கும் இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த 4 மாதங்களில் மட்டும் இங்குள்ள இந்துக் கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமீபத்தில், இதுபற்றி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஆஸ்., வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசினார்.
பிரிஸ்பேனில் உள்ள ஸ்ரீலட்சுமி நாராயணன் கோவிலில் உள்ள சுற்றுச்சுவரில், இந்தியாவுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராவும் வாசகங்கள் எழுதிவைத்துள்ளனர்.