இதனை தொடர்ந்து சர்வதேச அளவில் கடற்படைகளும், விமான படைகளும் அந்த விமானத்தை கண்டுபிடிக்கும் பணியில் கடந்த சில வருடங்களாக தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். ஆனால், அதற்கு எந்த பலனும் இல்லை.
விமானம் கடலில் விழுந்து மூழ்கியதா, நிலத்தில் விழுந்ததா, மலைப் பகுதியில் நொறுங்கியதா என்ற உறுதியான தகவல் தெரியவில்லை. விமானத்தின் கருப்பு பெட்டியும் பயனளிக்கவில்லை.
2016 ஆம் ஆண்டு விமானம் இந்திய பெருங்கடலுள் விழுந்திருக்கலாம் என்று கூறப்பட்டது. எனினும் விமானத்தைக் கண்டறிய முடியவில்லை. விமானத்தைக் கண்டுபிடிப்பது சிரமமானது என்று ஆஸ்திரேலிய, மலேசிய, சீன அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டனர்.