டிரம்ப்போடு இணையும் மூவர்: அச்சத்தில் அமெரிக்கா!!

Webdunia
திங்கள், 21 நவம்பர் 2016 (11:11 IST)
அதிபராக பொறுப்பேற்க உள்ள டொனால்ட் டிரம்ப் அமைச்சரவையில், முக்கிய அதிகாரிகளின் தேர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


 
 
அமெரிக்க அரசின் அமைச்சர்கள் உட்பட முக்கிய பதவிகள் நியமனம் நடைபெற்று வருகிறது. டிரம்ப் முக்கியமான மூன்று பதவிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்துள்ளார். 
 
அட்டார்னி ஜெனரலாக ஜெஃப் செசன்ஸ், புலனாய்வுத்துறை (சி.ஐ.ஏ) இயக்குனராக மைக் பாம்பெயோ மற்றும் தேசிய பாதுகாப்பு செயலாளராக மைக்கேல் ஃப்ளின் ஆகியோரை டிரம்ப் நியமனம் செய்துள்ளார். மூவருமே தீவிர வலதுசாரி சிந்தனை கொண்டவர்கள். 
 
ஜெஃப் செசன்ஸ்:
 
ஜெஃப் செசன்ஸ் கடுமையான குடியுரிமைச் சட்டத்திற்கு ஆதரவானவர்.
 
சட்டபூர்வமற்ற முறையில் குடியேறிவர்களை வெளியேற்ற வேண்டும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிலைப்பாடு கொண்டவர். 
 
மைக்கேல் ஃப்ளின்:
 
மைக்கேல் ஃப்ளின், இஸ்லாத்தையும் தீவிரவாதத்தையும் இணைத்து கடுமையாக எதிர்ப்பவர். அமெரிக்காவில் வசிக்கும் இஸ்லாமியர்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு கொண்டவர். 
 
மைக் ஃப்ளின்:
 
மைக் ஃப்ளின், பெங்காஸி துயரச் சம்பவத்தில் அரசின் அணுகுமுறையை கடுமையாக விமரிசித்தவர். 
 
மீண்டும் இந்த விவகாரத்தை தூசி தட்டி எழுப்பக்கூடும். ஹிலாரி மற்றும் ஒபாமா மீது புதிய குற்றச்சாட்டுகள் வரக்கூடும்.
அடுத்த கட்டுரையில்