சவுதிக்கு ஆயுத உதவியை நிறுத்த அமெரிக்கா தீர்மானம்

Webdunia
வெள்ளி, 14 டிசம்பர் 2018 (20:34 IST)
பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை சம்பவத்தில் சவுதி அரேபியாவை குற்றஞ்சாட்டும் வகையில், யேமனில் நடந்து வரும் போரில் அந்நாட்டுக்கான ராணுவ உதவியை திரும்ப பெறும் தீர்மானத்திற்கு ஆதரவாக அமெரிக்க செனட் சபை வாக்களித்துள்ளது.
 
அமெரிக்காவில் நடைமுறையில் உள்ள 1973 போர் அதிகாரங்கள் சட்டத்தை பயன்படுத்தி நிறைவேற்றப்பட்ட முதல் வாக்கெடுப்பு இதுவாகும். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நிர்வாகம், இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் சவுதியுடனான உறவு பாதிக்கப்படும் என்று தெரிவித்தார். 

இருப்பினும், அவர்களது குடியரசு கட்சியை சேர்ந்தவர்களே தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க 56-41 என்ற கணக்கில் அந்நாட்டு வரலாற்றில் முதல் முறையாக அதன் வெளிநாட்டு ராணுவ செயல்பாடு முடக்கப்படுவதற்கான வாய்ப்பு உண்டாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்