எரிமலையில் மோதி வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்? 22 பேர் பரிதாப பலி! - ரஷ்யாவில் சோகம்!

Prasanth Karthick
திங்கள், 2 செப்டம்பர் 2024 (08:15 IST)

ரஷ்யாவில் எரிமலை பகுதியை சுற்றி பார்க்க சென்ற சுற்றுலா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 22 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள வச்சகாஜெட்ஸ் என்ற எரிமலைப்பகுதி புகழ்பெற்ற சுற்றுலா பகுதியாக உள்ளது. கம்சத்கா தீபகற்பத்தில் உள்ள இந்த எரிமலையை காண ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அங்கு செல்கின்றனர்.

 

இந்நிலையில் மி-8 ரக ஹெலிகாப்டர் ஒன்று 19 பயணிகள் மற்றும் 3 விமானிகளுடன் எரிமலை பகுதிக்கு அருகிலிருந்து நிக்கோலாயீவ்கா கிராமம் நோக்கி சென்றுள்ளது. எரிமலை அருகே ஹெலிகாப்டர் சென்றுக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்திற்கு உள்ளானது.

 

இதை தொடர்ந்து அங்கு நடத்தப்பட்ட மீட்பு பணியில் ஹெலிகாப்டர் 900 மீட்டர் உயரத்தில் மோதி வெடித்தது தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த விமானிகள் உட்பட 22 பேரும் பரிதாபமாக பலியாகியுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில் இந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்