செவ்வாய் கிரகம் செல்ல 4 பேருக்கு பயிற்சி - நாசா அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 28 மார்ச் 2023 (20:21 IST)
இந்த விஞ்ஞான உலகில் நாளும் பல புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகள் என்று அடுத்த கட்டத்திற்குச் சென்று கொண்டுள்ளது.

ஏற்கனவே அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே சந்திரனின் கால்பதித்து சாதனை படைத்துள்ள நிலையில், இன்றுவரை மற்ற நாடுகள் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், இன்று எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் போன்ற தனியார் விண்வெளி மையங்களும் வந்து அவர்களுக்குப்போட்டியாகவுள்ளது.

இந்த நிலையில்,செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் அமெரிக்க விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

ALSO READ: நாளை ஒரே வரிசையில் ... 5 கிரகங்கள் வானில் தோன்றும் அதிசயம்
 
அதன்படி, செவ்வாய் கிரகத்திற்குச் சென்றால், அங்கு மனிதர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்று பயிற்சி அளிக்கும் பணியை விஞ்ஞானிகள் தொடங்கிவிட்டனர்.

தற்போது, பூமியில் இதற்கென்று செவ்வாய் கிரகம் போன்ற சூழலை செயற்கையாய் அமைத்து அங்கு4  மனிதர்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டு வருவதாக நாசா அதிகாரப்பூர்வமாகத் தன் அறிக்கையில் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்